குளத்தில் மூழ்கி கோவில் பூசாரி பலி
திருவேங்கடம் அருகே குளத்தில் குளிக்க சென்ற கோவில் பூசாரி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.;
Update: 2024-01-03 05:51 GMT
சடலம் மீட்பு
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள குருவிகுளத்தைச் சேர்ந்தவர் முத்தையா மகன் பாலசுப்ரமணியன் (53). பாலசுப்ரமணியன் கோவில் பூசாரி ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் குளத்தில் குளிக்கச் சென்ற பாலசுப்ரமணியன் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் கிடைத்த கழுகுமலை தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இதை குறித்து குருவிகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.