தென்காசி : இன்று மதியம் அமித்ஷா வருகை

தென்காசியில் இன்று மதியம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

Update: 2024-04-05 04:02 GMT

அமித்ஷா 

தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சியினரின் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரதமர் மோடி தமிழகத்தில் ஏற்கனவே பிரசாரம் செய்துள்ள நிலையில் அடுத்த வாரமும் பிரசாரம் செய்ய உள்ளார். இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று (வெள்ளிக்கிழமை) பிரசாரத்திற்காக தென்காசி வருகிறார். இதற்காக இன்று சிவகங்கை தொகுதியில் பிரசாரத்தை முடித்துவிட்டு மதியம் ஹெலிகாப்டரில் தென்காசி வருகிறார். தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள ராமசாமி பிள்ளை பள்ளி வளாகத்திற்கு இன்று மதியம் 12.30 மணிக்கு வந்து இறங்கும். அமித்ஷா அங்கிருந்து நேரடியாக காரில் பிரசாரத்திற்கு புறப்படுகிறார்.
Tags:    

Similar News