தென்காசி வேட்பாளர் ஜான் பாண்டியன் பரபரப்பு புகார்
தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் பரபரப்பு புகார்.
Update: 2024-04-02 02:36 GMT
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார். ஜான் பாண்டியன் நேற்று திடீரென மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு வந்து அங்கிருந்த தேர்தல் தாசில்தார் ஹென்றி பீட்டரிடம் புகார் மனு அளித்தார். அம்மனுவில் அவர் கூறியிருப்பதாவது: தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக வேட்பாளராக போட்டியிடும் என்னுடைய சமூக வலைத்தள கணக்குகளில் நான் மேற்கொள்ளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஆட்சேபனைக் குரிய கருத்துக்கள் இருப்பதாக கூறி என்னை விசாரணைக்கு அழைத்தார்கள். ஆனால் அப்படி எதுவும் என்னுடைய சமூக வலைத் தளங்களில் இல்லை. திமுகவின் தூண்டுதலின் பேரில் இந்த விசாரணைக்கு என்னை அழைத்து என் பிரச்சாரத்தை பாதியில் ரத்து செய்ய வைத்த அதிகாரி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள் ளார். இதுகுறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது: இன்று இந்தியா முழுவதும் சமூக வலைத்தளங்கள் செயல்பட்டுக் கொண்டிருக் கிறது. திமுக அரசு செய்துள்ள தப்பை மறைப்பதற்காக எங்கள் மீது புகார் தெரிவித்துள்ளனர். அமைதியான முறையில் தேர்தல் நடைபெற வேண்டும். ராஜா எம்எல்ஏ குறித்து சோசியல் மீடியாவில் வந்துள்ளது. அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதில் என் மீது ஏன் அதிகாரிகள் பாய வேண்டும் என்றார்.