தென்காசி : மேலமுத்தாரம்மன் கோயில் கும்பாபிஷேகம்
தென்காசி மேலமுத்தாரம்மன் கோயிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.;
Update: 2024-02-09 03:09 GMT
தென்காசி கூளக்கடை பஜாரில் அமைந்துள்ள அருள்மிகு மேலமுத்தாரம்மன் கோயில் - பரிவார மூா்த்திகளுக்கும், சாலைக்கோபுரம் விமானங்களுக்கும் நூதன புனராவா்த்தன ஜூா்ணோத்தராண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் காலை 8 மணிக்கு மங்கள வாத்தியத்துடன் கும்பாபிஷேக வழிபாடுகள் தொடங்கின. கால யாக பூஜையும், மாலை 5 மணிக்கு 3ஆம் கால யாக பூஜையும் நடைபெற்றன. காலை 6 மணிக்கு மேல் விக்னேஷ்வர பூஜை, புண்ணியாகவாசனம், பிம்பசுத்தி, மூா்த்தி ரக்சாபந்தனம், சூா்யபூஜை, யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடைபெற்றது. 9 மணிக்கு மூலவா் விமானம், பரிவார தேவதைகள் விமானம்-கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 9.20 மணிக்கு மூலவருக்கும், 9.35 மணிக்கு பரிவார தேவதைகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.