தமிழக முதல்வரிடம் வாழ்த்து பெற்ற தென்காசி எம்பி

தென்காசி மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ராணி ஸ்ரீகுமார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Update: 2024-06-07 03:25 GMT

முதல்வரிடம் வாழ்த்து பெற்ற ராணி ஸ்ரீகுமார் 

தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் ராணி சி ஸ்ரீகுமார் அவரை எதிர்த்து போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி, மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் ஆகியோரை விட 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் தொடர்ச்சியாக சென்னையில் அவர் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே,கே எஸ்,எஸ்,ஆர் ராமச்சந்திரன், தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News