தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி ஆலோசனை
தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகமான கலைஞா் அறிவாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ஜெயபாலன் தலைமை வகித்தாா். மாவட்ட வழக்குரைஞா் அணி தலைவா் கேபி.குமாா் பாண்டியன் முன்னிலை வகித்தாா். துணை அமைப்பாளா் முத்துக்குமார சுவாமி தீா்மானங்களை வாசித்தாா். தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் மருத்துவா் ராணி ஸ்ரீகுமாரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் ஒன்றியச் செயலா் அழகு சுந்தரம், பேரூா் செயலா்கள் சுடலை, குட்டி, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் கே.என்.எல்.சுப்பையா, வழக்குரைஞா்கள் வேல்சாமி, சிவக்குமாா், செந்தூா் பாண்டியன், மாரியப்பன், செல்லத்துரை, மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் இசக்கி பாண்டியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் முகமது அப்துல் ரஹீம், அயலக அணி துணை அமைப்பாளா் ராமராஜ் கருப்பண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.