காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தை அமாவாசை சிறப்பு பூஜை

காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தை அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2024-02-09 10:15 GMT


காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் தை அமாவாசை சிறப்பு வழிபாடு நடந்தது.


சேலம்– நாமக்கல் மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள காளிப்பட்டி கந்தசாமி முருகன் கோவிலில் நேற்று தை அமாவாசை தினத்தை முன்னிட்டு, மூலவர் தங்ககவசத்தில் அருள்பாலித்தார். கோவில் உட்பிரகாரத்தில் உற்சவர் வள்ளி, தெய்வாணையுடன் சிறப்பு தோற்றத்தில் அருள்பாலித்தார். கோவில் முழுவதும் பலவகையான வண்ண மலர்களால் அலங்கறிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாது, வழிவிடு விநாயகர், வேலவர், இடும்பன் சுவாமிகள் வெள்ளி கவசத்தில் அருள்பாலித்தனர். சேலம், கரூர், ஈரோடு, தர்மபுரி என பல்வேறு மாவட்டங்களிலிருந்துவந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News