மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக: அதிமுக தஞ்சை மாவட்ட செயலாளர்

மக்களை ஏமாற்றி திமுக ஆட்சிக்கு வந்துள்ளதாக அதிமுக தஞ்சை மாவட்ட செயலாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

Translated by :  King 24x7 Website
Update: 2023-10-27 13:50 GMT

அதிமுக பொதுக்கூட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், அதிமுக தொகுதி கழகத்தின் சார்பில் 52 ஆவது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் வியாழக்கிழமை மாலை  காந்தி பூங்கா அருகில் நடைபெற்றது.  அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் சி.வி. சேகர் தலைமை வகித்தார். கூட்டத்தில் அவர் பேசியதாவது,  "திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று சொன்னார்கள். இதுவரை நீட் தேர்வை ரத்து செய்தார்களா, தற்போது கையெழுத்து இயக்கம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர் கெட்டுள்ளது என இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். தஞ்சை மாவட்ட பகுதியில் கஜா புயலின் தாக்கத்தால், இப்பகுதி தென்னை விவசாயிகள், தங்கள் பிள்ளைகளை போல வளர்த்த தென்னைகளை இழந்து பரிதவித்தார்கள். அப்போது எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு 400 கோடி ரூபாய் வழங்கி விவசாயிகளின் துயர் துடைத்தனர். திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்தனர்.  ஆட்சிக்கு வந்த பிறகு தாங்கள் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் கொரோனா பாதிப்பின் போது அனைத்து மக்களுக்கும் பாரபட்சம் இன்றி நிவாரணம் வழங்கப்பட்டது. சிறுபான்மையினர் மீது அக்கறை உள்ளதாக திமுகவினர் காட்டிக் கொள்கின்றனர். பாஜக கூட்டணியை விட்டு அதிமுக விலகியதும் சிறுபான்மையினர் அதிமுகவை நோக்கி வரத் தொடங்கி யுள்ளனர். இதனை திமுகவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.  எனவே, வரவிருக்கும் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்" என்றார்.  கூட்டத்தில், ஒன்றியச் செயலாளர்கள் ஆர்.மதியழகன், உ.துரை மாணிக்கம், கே.எஸ். அருணாசலம், மலை. முருகேசன், ஒன்றியப் பெருந்தலைவர் சசிகலா ரவி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தலைமைக் கழகப் பேச்சாளர் தோவாலா மா.ரவி, அமைப்புச் செயலாளர் துரை. செந்தில், மாநில கழக விவசாய பிரிவு இணைச் செயலாளர் மா. கோவிந்தராசு, மாவட்டக் கழக அவைத்தலைவர் எஸ்.வி.திருஞானசம்பந்தம், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் பி.என்.ராமச்சந்திரன், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் இரா. கார்த்திகேயன், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஏ.மலைஅய்யன், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் எஸ்.ஆர்.ஜவஹர் பாபு, மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் எஸ்.டி.எஸ்.செல்வம் மற்றும் அதிமுகவின் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக பேராவூரணி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் கோவி. இளங்கோ வரவேற்றார். நிறைவாக, பேராவூரணி பேரூர் கழக செயலாளர் எம். எஸ்.நீலகண்டன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News