தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் ஏற்பட்ட விரிசல் சீரமைப்பு: போக்குவரத்து துவக்கம்

சேதமடைந்த பாலம் சீரமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

Update: 2024-04-01 11:45 GMT

பாலம் சீரமைப்பு 

தஞ்சாவூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை கடந்த 2008 ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வந்தது. இந்த வழித்தடத்தில், செங்கிப்பட்டியில் இருபுறமும் சர்வீஸ் சாலையுடன் கூடிய மேம்பாலம் கட்டப்பட்டது.  இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன்.20 ஆம் தேதி, மேம்பாலத்தின் பக்கவாட்டு சிமென்ட் சுவர் அடுக்குகளில், சுமார் 60 அடி நீளம், 30 அடி அகலம் அளவுக்கு இடிந்து விழுந்து, மண் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பிறகு, டில்லி ஐ.ஐ.டி.,யை சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் மற்றும் திருச்சி என்.ஐ.டி., பேராசிரியர்களின் தொழில்நுட்ப ஆலோனையின் படி, மேம்பாலத்தினை சீரமைப்புக்கும் பணிகள் கடந்த 8 மாதங்களாக நடந்து வந்தது. இதையடுத்து சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், மேம்பாலத்தில் மீண்டும் போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமை முதல் துவங்கியது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் கூறியதாவது; தஞ்சாவூர் – திருச்சி மே்மபாலம் சேதமடைந்த பகுதிகள், கந்தர்வகோட்டை – பூதலூர் சுரங்கப் பாதை ஆகிய பகுதிகளை பலப்படுத்த 2.5 கோடி ரூபாய் ஓதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடந்து வந்தது.  இதனால் சர்வீஸ் சாலைகளில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. பணிகள் தற்சமயம் முடிவடைந்த போக்குவரத்து மீண்டும் துவங்கி விட்டது.   சேதமடைந்த பாலத்தில் 650 இடங்களில் ஆணி, எஃகு வலுவூட்டல்களை கொண்டு, மறுசீரமைப்பு நடந்துள்ளது. மேலும், கட்டமைப்பை உறுதிப்படுத்துவதற்காக, 32 மி.மீ விட்டம் கொண்ட எஃகு கம்பிகள் மண்சரிவு ஏற்பட்ட அடிப்பகுதியில் சொருகப்பட்டுள்ளது" இவ்வாறு தெரிவித்தனர்.
Tags:    

Similar News