திருப்பூர் தொகுதி வேட்பாளர் நிர்வாகிகளுக்கு நன்றி
திருப்பூர் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சுப்பராயன் MP கூட்டத்தில் பங்கேற்று, கடந்த 19-04-2024 அன்று நடைபெற்ற 18-வது நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியா கூட்டணியின் சார்பில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட தனக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு சேகரிக்க கடந்த ஒரு மாத காலத்திற்கும்,
மேலாக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட, தேர்தல் பரப்புரை மற்றும் தேர்தல் பணிகளில் அர்ப்பணிப்போடு ஈடுபட்ட திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து சிறப்புரை ஆற்றினார்.
குறிப்பாக திமுக, காங்கிரஸ், சிபிஐ(எம்), மதிமுக, கொமதேக, விசிக, மக்கள் நீதி மய்யம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, திராவிடர் கழகம், தமிழ் புலிகள் கட்சி, ஆதி தமிழர் பேரவை உள்ளி்ட்ட பல்வேறு கட்சிகளின் மாநில, மாவட்ட, தொகுதி, வட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், தேர்தல் பணி பொறுப்பாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், தகவல் தொடர்பு பொறுப்பாளர்கள்,
தொழிற் சங்கங்கள், விவசாய சங்கங்கள், மாதர், இளைஞர், மாணவர், கலை இலக்கியம் உள்ளிட்ட சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் வேட்பாளர் சார்பில் நன்றி தெரிவித்தார்.