தந்தை பெரியார் நினைவு நாள் - கே என் நேரு‌ மரியாதை

தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி திருச்சியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Update: 2023-12-24 04:30 GMT

தந்தை பெரியார் நினைவு நாள் 

தந்தை பெரியாரின் 50 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என் நேரு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின் போது மாநகர மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, எம்.எல்.ஏ பழனியாண்டி உள்ளிட்ட திமுகவினர் பலர் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News