மின்னொளியில் ஜொலிக்கும் காஞ்சி வரதர் கோவில் 100கால் மண்டபம்
100 கால் மண்டபம், இரவிலும் ஒளிரும்படி கோவில் நிர்வாகம் சார்பில், அலங்கார மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
By : King 24X7 News (B)
Update: 2024-02-29 09:54 GMT
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், அனந்தசரஸ் புஷ்கரணி திருக்குளத்தையொட்டி, 13ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட 100 கால் மண்டபம் உள்ளது.
இம்மண்டபத்தில், ராமாயணம், தசாவதாரம், ரதி மன்மதன், போர் வீரர்கள், ஒரே கல்லால் வடிக்கப்பட்ட சங்கிலி, கலை நுணுக்கத்துடன் நிறைந்த வேலைப்பாடுடைய அழகிய கருங்கல் சிற்பங்கள் உள்ளன. வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்கள், 100 கால் மண்டபத்தில் உள்ள ஒரே கல்லால் ஆன சங்கிலிகளையும்,
அழகிய சிற்பங்களையும் கண்டு வியந்தபடி செல்கின்றனர். இந்நிலையில், 100 கால் மண்டபம், இரவிலும் ஒளிரும்படி கோவில் நிர்வாகம் சார்பில், அலங்கார மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், 100 கால் மண்டபம் இரவு நேரத்தில் மின்னொளியில் ஜொலிக்கிறது.