கீழடியில் 10ஆம் கட்ட அகழாய்வு பணிகள் துவக்கம்

கீழடியில் 10ஆம் கட்ட அகழாய்வு பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்

Update: 2024-06-19 11:29 GMT

அகழாய்வு பணிகள் துவக்கம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் பத்தாம் கட்ட அகழ்வாய்வு பணியினை சென்னையில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் துவக்கி வைத்தார். கீழடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் ஆசா அஜித், கீழடியில் 0.25 ஏக்கர் நிலத்தில் பத்தாம் கட்ட அகழ்வாராய்ச்சி ரூ 30 லட்சம் செலவில் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், இப்பணி தாமதமாக துவங்கியதால் அதிகமான வேலையாட்களை நியமித்து, மழைக்காலம் தூங்குவதற்கு முன்னர் வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 10ம் கட்ட அகழாய்வு பணி நிறைவடைந்த பின்னர் திறந்தவெளி அருங்காட்சியகமாக அமைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.
Tags:    

Similar News