ஐஜேகே தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளித்த நிர்வாகிகள்

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த இந்திய ஜனநாயக கட்சிதலைவர் ரவி பச்சமுத்துவிற்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Update: 2024-07-05 05:56 GMT
வரவேற்பளித்த கட்சியினர் 
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கு கலந்து கொள்ள வருகை புரிந்த இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்துவிற்கு விழுப்புரம் மத்திய மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் மாநில இளைஞரணி அமைப்புச் செயலாளர் அறிவு என்கின்ற அறிவழகன் முன்னிலையில் தலைவருக்கு பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டு பரிவட்டம் கட்டப்பட்டு பொதுக்கூட்டம் நடைபெறும் திடலுக்கு இரு சக்கர பேரணியாக 500-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில் மாநில விளம்பர பிரிவு செயலாளர் முத்தரசன், ஐஜேகே மாவட்ட தலைவர்கள் பாலா ஸ்ரீதர் மாவட்ட செயலாளர் ஜான் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News