விவசாய தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

இலவச வீட்டு மனை பட்டா கேட்டு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-07-05 12:33 GMT

இலவச வீட்டு மனை பட்டா கேட்டு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான விவசாயத் தொழிலாளர் குடும்பத்தினர் உள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு, விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், குமாரபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளாக இருக்கக்கூடிய வாசுகி நகர், நேரு நகர், குளத்துக்காடு, தட்டாங்குட்டை, மஞ்சு பாளையம், சவுதாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சங்க மாவட்ட தலைவர் சி.துரைசாமி தலைமையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா அவர்களை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவிப்பதற்காக சென்றிருந்தனர்.

அப்பொழுது அங்கிருந்த ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் வேறு சில பகுதிகளில் ஆய்வுக்காக சென்றிருப்பதாக கூறியுள்ளனர்.மேலும் அங்கிருந்த போலீசார் அவர்களை கலைந்து போக கூறியுள்ளனர். இதனை ஏற்காத விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் ,மாவட்ட ஆட்சியர் வரும் வரை காத்திருப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகப் பகுதியிலே காத்திருப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்து,போராட்டக்காரர்களை சந்தித்து விபரம் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் உமா தொடர்ந்து நீங்கள் இலவச வீட்டு மனை பட்டா கேட்பது குறித்த தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. கட்டாயம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் உறுதி அளித்து" குமாரபாளையம் தாசில்தார் சண்முகவேலிடம் இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு அறிக்கை அனுப்பும்படி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்வில் சிஐடியு தொழிற்சங்க மாவட்ட செயலாளர் என்.வேலுச்சாமி, தொழிற்சங்க நிர்வாகிகள் சிவராஜ், கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினர் கோவிந்தசாமி, கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் குருசாமி, சங்க நிர்வாகிகள் சின்னதாய், சித்ரா, ரேவதி ,முருகன், சண்முகம், முருகேசன் மாவட்ட குழு உறுப்பினர் நடேசன் உள்ளிட்ட பலர் இந்த காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றனர். இதனை அடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்..

Tags:    

Similar News