அங்கன்வாடி மையம் எதிரே தேங்கிய தண்ணீரால் அவதி

அங்கன்வாடி மையம் எதிரே தேங்கிய தண்ணீரால் அவதி இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2024-02-09 10:06 GMT
அங்கன்வாடி மையம் எதிரே தேங்கிய தண்ணீரால் அவதி
சித்தாமூர் அருகே சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட வேளூர் கிராமத்தில், அரசு பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில், 15 குழந்தைகள் படிக்கின்றனர். மேலும், கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என, 10 பேர் இணை உணவு மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையால் பயனடைந்து வருகின்றனர். அங்கன்வாடி மையம் எதிரே தண்ணீர் தேங்கி உள்ளதால், உள்ளே செல்ல குழந்தைகள் கடும் அவதிப்படுகின்றனர். இந்த மையம் தாழ்வான பகுதியில் உள்ளதால், அருகே உள்ள ஏரியில் இருந்து நீரூற்று ஏற்பட்டு, அங்கன்வாடி எதிரே தண்ணீர் தேங்கி உள்ளதாக கூறப்படுகிறது. பல நாட்களாக தொடர்ந்து தண்ணீர் தேங்கி உள்ளதால், கொசு உற்பத்தியாகி, குழந்தைகளுக்கு நோய் தொற்று பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, அங்கன்வாடி மையம் எதிரே தண்ணீர் தேங்காதபடி, மணல் கொட்டி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
Tags:    

Similar News