ரேஷன் பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை !
தமிழகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தலை தடுக்க உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-15 09:10 GMT
தமிழகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தலை தடுக்க உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 5 மாதங்களில் ரேஷன் பொருட்கள் கடத்தல் தொடர்பாக தமிழகம் முழுவதும் 3,660 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புடைய 3,794 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்குகளில் இருந்து 1,019 டன் ரேஷன் அரிசி, 2,310 லிட்டர் மண்எண்ணெய், 1,003 சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 2 லட்சத்து 56 ஆயிரத்து 762 ஆகும். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 568 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.