பேக்கரி உரிமையாளரை வீடு புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல்
காந்தி மார்க்கெட் அருகே வீடு புகுந்து பேக்கரி உரிமையாளரே தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
Update: 2024-02-17 11:17 GMT
மர்ம நபர்கள் தாக்குதல்
திருச்சி மேற்கு விஸ்வாஸ் நகர் ஆறாவது தெரு பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் வயது,70 இவர் காந்தி மார்க்கெட் தஞ்சாவூர் ரோடு பகுதியில் பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். பின்னர் வழக்கம்போல் இரவு பேக்கரியை சாத்திவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கினார். இந்த நிலையில் நள்ளிரவு யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு இருந்தார் பின்னர் வெளியே வந்து பார்த்தபோது அவரை சிலர் சுற்றி வளைத்து தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் அவர் தலை மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் இதுகுறித்து செல்வகுமார் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் அளித்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.