வாக்காளர்களின் பெயர்கள் இல்லை என கூறி பாஜகவினர் போராட்டம்!

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் வாக்காளர்களின் பெயர்கள் இல்லை என கூறி பாஜகவினர் போராட்டம் நடத்தினர்.

Update: 2024-04-19 11:14 GMT
கோவை மக்களவைத் தொகுதி கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அங்கப்பா பள்ளியில் பூத் எண் 214 ல் 1353 ஓட்டுகள் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் இருந்த நிலையில் தற்போது வெறும் 523 ஓட்டுக்களை உள்ளதாகவும் 800-க்கும் மேற்பட்டோர் ஓட்டுகள் இல்லை எனவும் பல்வேறு வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாரதிய ஜனதா கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கேட்டபோது விசாரித்து பதில் அளிப்பதாக கூறினார். இதனை தொடர்ந்து வாக்குச்சாவடி மையத்திற்குள் வாக்காளர்கள் சிலரும் பாஜக கட்சியை சேர்ந்தவர்களும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் இது குறித்து பேசினார். அப்போது கடந்த முறை வாக்களித்த வாக்காளர்களின் பட்டியல் தற்பொழுது குறுகிய காலத்தில் இல்லை என்றால் அவர்களுக்கு மீண்டும் வாக்கு பதிவு நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இது குறித்து ஆர்.ஓ விடம் புகார் அளிக்க உள்ளதாகவும் இந்த வாக்குச்சாவடியில் மறுவாக்கு வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Tags:    

Similar News