அன்னதானப்பட்டியில் சாலையில் இறந்து கிடந்த 2 பேரின் உடல்கள் மீட்பு....
சேலத்தில் சாலையில் இறந்து கிடந்த 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-22 05:39 GMT
மரணம்
சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சீலநாயக்கன்பட்டி மேம்பாலத்தின் அடியில் 40 வயதுக்கு மேற்பட்ட ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு சென்று இறந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரித்தனர். ஆனால் அவரை பற்றிய விவரம் ஏதும் உடனடியாக தெரியவில்லை. இதையடுத்து அங்குள்ள பொதுமக்களின் உதவியுடன் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், அன்னதானப்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சண்முகா நகர் பாலத்தின் அடியில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார் அங்கு சென்று இறந்தவரின் உடலை மீட்டு விசாரித்தனர். ஆனால் அவர் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர்? என்ற விவரம் ஏதும் உடனடியாக தெரியவில்லை. அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.