துண்டிக்கப்பட்ட தலை - தண்டவாளத்தில் சடலம்
நெமிலி அருகே ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த வாலிபரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-24 16:26 GMT
கோப்பு படம்
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த மஞ்சம்பாடி ரயில்வே கேட் அருகே உள்ள தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை கண்ட அவ்வழியே சென்றவர்கள் வருவாய்த் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் செங்கல்பட்டு ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்தவருக்கு சுமார் 35 வயது இருக்கும். அவர் யார்?, ரயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.