சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
தர்மபுரி அருகே சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுசிறைதண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
By : King 24X7 News (B)
Update: 2024-02-24 15:50 GMT
தர்மபுரி மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழைய இண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மகன் சௌகத். தொழிலாளியான இவர், கடந்த 2022 நவம்பர் 16ம்தேதி, பள்ளிக்கு தனியாக சென்ற சிறுமியை சோளக்காட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் காவல்துறையினர் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சௌகத்தை கைது செய்தனர். தர்மபுரி போக்சோ நீதி மன்றத்தில்
, இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், இறுதி விசாரணை நடந்தது. இதில்,சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் சவுகத்திற்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ₹5 ஆயிரம் அபராதம் விதித்து, நீதிபதி சயத் பர்கத்துல்லா தீர்ப்பு வழங்கினார்.