ரமலான் பண்டிகை கொண்டாட்டம் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை !

ரமலான் பண்டிகை கொண்டாட்டம் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுக ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர்.;

Update: 2024-04-11 05:35 GMT
ரமலான் பண்டிகை கொண்டாட்டம் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை !

ரமலான் பண்டிகை

  • whatsapp icon
இந்தியா முழுவதும் ரம்ஜான் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இஸ்லாமிய பெருமக்கள் நேற்று மாலை பிறை தெரிந்த உடன் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மசூதிகளில் நடைபெற்ற சிறப்புதொழுகையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் கடந்த ஒரு மாத காலமாக நோன்பை கடைப்பிடித்தனர். ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்வதுடன் ஈகைப் பெருநாளை கோலாகலமாக கொண்டாடுகின்றனர். அதனையொட்டி விழுப்புரம் நகராட்சி மைதானத்தில் ரம்ஜான் சிறப்பு தொழுகை காலை 7.30 மணிக்கு நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் கீழ்பெரும்பாக்கம் பள்ளிவாசல், தக்கா தெரு பள்ளி வாசல், வடக்குத் தெரு வாலாஜா பள்ளி வாசல், பாகர்ஷா தெரு பள்ளி வாசல், காணை, மாம்பழப்பட்டு, செஞ்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற பெருநாள் தொழுகைகளில் ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், சிறுவர், சிறுமியர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். புத்தாடை அணிந்து, உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
Tags:    

Similar News