தாராபுரம் அரசு கல்லூரியை திறந்து வைத்த முதல்வர்
தாராபுரம் அரசு கலை அறிவியல் கல்லூரியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
Update: 2024-02-28 05:06 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை திறந்து வைத்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பங்கேற்றார்கள். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, மண்டல இணை இயக்குனர் கலைச்செல்வி, செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) திருநாவுக்கரசு, திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் பத்மாவதி ஆகியோர் உள்ளனர்.