தந்தை வழியில் முதல்வா் செயல்படுகிறாா்:அமைச்சா் கே.என்.நேரு
திருச்சி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியைத் தந்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.
திருச்சி தெற்கு மாவட்டம், மாநகரத்திற்குட்பட்ட மார்க்கெட் பகுதி கழகத்தின் சார்பாக நடைபெற்ற, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் திருச்சி பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்த வாக்காளப் பெருமக்களுக்கும்,
கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி அறிவிக்கும் பொதுக் கூட்டம் திருச்சி இ.பி, ரோட்டில் நடைபெற்றது . கூட்டத்தில் பேசிய திமுக முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு திமுக தனித்துப் போட்டியிடுவது தொடங்கி பல்வேறு முக்கிய முடிவுகள் திருச்சியில்தான் எடுக்கப்பட்டு, அவை வெற்றியும் பெற்றுள்ளன.
அந்த வகையில் தற்போது நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலிலும், திருச்சியில் தோ்தல் பிரசாரம் தொடங்கி, திமுக அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 1996 முதல் 2001-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியின்போது சுமாா் 50 முறை முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி திருச்சிக்கு வந்துள்ளாா். அதுமட்டுமல்லாமல், திருச்சியில் ஏற்பட்ட வெள்ளபாதிப்பைக் காணவும் திருச்சிக்கு வந்தாா். அதன்பின்னா் அவா் கொண்டு வந்த திட்டம்தான் குழுமாயி அம்மன் கோயில் அருகே அமைக்கப்பட்டுள்ள தொட்டிப்பாலம் திட்டம்.
அதனால்தான் திருச்சியில் வெள்ள பாதிப்பு முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல திருச்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள அனைத்து முக்கியத் திட்டங்களையும் கொண்டு வந்ததும் அவா்தான். அவரது வழியிலேயே தற்போதைய முதல்வா் மு.க. ஸ்டாலின், ஒரு மாநில முதல்வா் எவ்வாறு செயல்பட வேண்டுமோ அதுபோல சிறந்த முதல்வராக செயல்பட்டு வருகிறாா் என்றார்