இலவச இருதய மருத்துவ முகாமினை பார்வையிட்ட ஆட்சித்தலைவர் !!

இலவச இருதய மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் பார்வையிட்டார்.

Update: 2024-05-25 09:47 GMT

இலவச இருதய மருத்துவ முகாம்

விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, ஏகம் அறக்கட்டளை மற்றும் கோவை ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச இருதய மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் பார்வையிட்டார்.

இம்முகாம் மூலமாக விருதுநகர் சுகாதார பிரிவு மாவட்டத்தில் 60 குழந்தைகள் மற்றும் சிவகாசி சுகாதார பிரிவு மாவட்டத்தில் 90 குழந்தைகள் தேசிய குழந்தைகள் நலவாழ்வு திட்டம் (Rashtriya Bal Swasthya Karyakram-RBSK) ) குழு மூலமாக அழைத்து வரப்பட்டனர். மேலும், இக்குழந்தைகளுக்கு இருதய நோய் நிபுணர்கள் இருதய பரிசோதனையான ECHO SCAN செய்வதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.

பின்னர் அவர்களில் தேசிய குழந்தைகள் நலவாழ்வு திட்டம் மூலம் அழைத்து வரப்பட்ட குழந்தைகளுக்கு பரிசோதனை செய்து, அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகள் உயர் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுவர்;. அவர்களுக்கான அறுவை சிகிச்சைகள் கோவை ஜி.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் (CMCHIS) மூலமாக நடைபெறும் என்று தெரிவித்தார்கள்.

Tags:    

Similar News