துப்புரவுப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

பெரியகுளத்தில் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவுப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-03-01 17:51 GMT

பெரியகுளத்தில் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவுப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஓ.எச்.டி ஆப்பரேட்டர்கள் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் நான்கு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி காத்திருக்க போராட்டத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் 17 ஊராட்சிகள் உள்ளன. இந்த 17 ஊராட்சிகளில் துப்புரவு, தூய்மை காவலர்கள் மற்றும் ஓ எச் டி ஆப்பரேட்டர்கள் என 280 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் முன்கல பணியாளர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு அரசாணையின் கீழ், நிலுவையாக உள்ள ஊதியத்தை வழங்கிட வலியுறுத்தியும், தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம், பெரும் துப்புரவு பணியாளர்களுக்கு ஏழாவது ஊதிய குழு அரசாணைப்படி ஊதிய நிர்ணயம் செய்ய வேண்டும், தூய்மை காவல் பணியில் ஈடுபடும் நபர்களுக்கு பணிக்கேற்ப சம்பள உயர்வு வழங்கிட வேண்டும்.

,மாதம்தோறும் 5 ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்கிட வேண்டும், துப்புரவு பணியாளர்கள் தூய்மை காவலர்கள் மற்றும் ஓ எச் டி ஆப்பரேட்டர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள சேவை தூய்மை பணிக்கு சென்ற பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவது, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயில் முன்பாக அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதோடு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கை முழக்கமிட்டனர். இந்த காத்திருப்பு போராட்டத்தில் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

Tags:    

Similar News