வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-02-29 03:18 GMT

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், குண்டாயிருப்பு ஊராட்சியில், கனிமவள நிதியின் கீழ் ரூ.1.28 கோடி மதிப்பில் 21 திருநங்கைளுக்கு குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வரும் பணிகளையும், மேலும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு மையத்தில் 356 வீடுகள் ரூ.18.51 கோடி மதிப்பில் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதையும்,

அதனை தொடர்ந்து, வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வெற்றிலையூரணி கிராமத்தில் தோட்க்கலைத்துறையின் மூலம் இயற்கை பண்ணையம் முறையில் 23 ஏக்கரில் பரப்பளவில் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருவதையும், தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தோட்டக்கலை பயிர்களான டிராகன் பழம், கொய்யா, நெல்லி, வாழை, தென்னை மற்றும் பந்தல் புடலங்காய் ஆகிய பயிர்கள் நுண்ணீர் பாசனம் அமைத்து சாகுபடி செய்யப்பட்டு வருதையும்,

அங்கக வேளாண்மைக்குத் தேவையான இடுபொருட்கள் அனைத்தையும் தன்னுடைய தோட்டத்திலே தயாரித்து வருவதையும், பஞ்ச காவியா, மீன் அமிலம், இ.எம் கரைசல் மற்றும் ஏழு இலை கரைசல் ஆகியவற்றை தயாரித்து தனது பண்ணையில் இடுபொருட்களாக உபயோகித்து வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News