அரசு மருத்துவமனையில் ஆட்சியர் திடீர் விசிட்
கலவை அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார்.
Update: 2024-07-03 10:13 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் ,கலவை அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் வளர்மதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்த பொது மக்களிடம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும் முறை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது ஆட்சியருடன் மருத்துவர்கள் மற்றும் வட்டாட்சியர் சுரேஷ் உடன் இருந்தனர்.