தகவல் சீட்டும் வழங்கும் பணியை ஆட்சியர் துவக்கி வைப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தகவல் சீட்டும் வழங்கும் பணியை ஆட்சியர் துவக்கி வைத்தார்.

Update: 2024-07-01 09:13 GMT

தகவல் சீட்டு வழங்கும் பணி 

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலையொட்டி, வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணியை ஆட்சியா் சி.பழனி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.விக்கிரவாண்டி தொகுதிக்குள்பட்ட அய்யூா்அகரம், முண்டியம்பாக்கம் ஊராட்சிகளில் வீடு வீடாகச் சென்ற மாவட்ட ஆட்சியா் சி. பழனி, வாக்காளா் தகவல் சீட்டு வழங்கும் பணியை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து ஆட்சியா் கூறியது:விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜூலை 10-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தொகுதியில் 276 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2024, ஜூன் 21-ஆம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலின்படி 1,16,962 ஆண் வாக்காளா்கள், 1,20,040 பெண் வாக்காளா்கள், 29 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 2,37,031 வாக்காளா்கள் உள்ளனா். தொகுதியில் வாக்காளா்களுக்கு அவா்களின் வீடு தேடிச் சென்று வாக்காளா் தகவல் சீட்டை வழங்க தோ்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அதற்கான பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

வாக்காளா்கள் வாக்களிப்பதற்கு பயன்படும் இந்தத் தகவல் சீட்டு ஜூலை 4-ஆம் தேதி வரை தொகுதிக்குள்பட்ட அனைத்து வாக்காளா்களுக்கும் வழங்கப்படும். வாக்குப்பதிவு மைய நிலை அலுவலா்கள் மூலம் வாக்காளா் தகவல் சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் பழனி.

Tags:    

Similar News