கிரிவலப் பாதை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை !
தமிழக அரசு இந்த தீர்ப்புகளுக்கு தடையானை பெற்று மறு ஆய்வு மனுவின் மூலம் ஏழை தொழிலாளிகளின் வாழ்க்கையை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-13 06:59 GMT
பழனி முருகன் கோவிலில் ஏற்கனவே கொடி மரம் அருகில் யார் செல்ல வேண்டும் என்ற ஒரு தீர்ப்பும், கிரிவலப் பாதையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று மற்றொரு தீர்ப்பும் உள்ளது.தீர்ப்புகள் வருகின்ற பொழுது அங்கு வாழும் மக்களின் வாழ்நிலையை கணக்கில் எடுத்துக் கொண்டு தீர்ப்புகள் வருவது சாத்தியமாக இருக்கும். மிகுந்த கவலையோடு கவனிக்க வேண்டிய விஷயம் இந்த இரண்டு திருவிழா காலங்களில் அதிகபட்சம் 90 நாள் உழைத்து தான் 365 நாள் வாழ்க்கையை நடத்த வேண்டியவர்களாக பழனியில் அதிகம் உள்ளார்கள். அன்றாட வாழ்க்கைக்காக அரும்பாடு படும் அந்த சாலை ஓர வியாபாரிகளுக்கு அன்றாட வாழ்க்கையை உறுதிப்படுத்தவேண்டும்,அங்கு போடப்பட்டுள்ள கம்பி அகற்றப்பட வேண்டும் என தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.