விபத்தில் சிக்கியவர்களை மீட்ட காங்கிரஸ் தலைவர் !
நாகர்கோவில் அருகே விபத்தில் சிக்கியவர்களை காங்கிரஸ் தலைவர் , எம்பி மீட்டு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-05 10:08 GMT
காங்கிரஸ் தலைவர் , எம்பி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த பரசேரி பகுதியில் திருவனந்தபுரம் மெயின் சாலையில் கனரக வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது வாகனத்தின் பின்புற கதவு திடீர் என திறந்ததால் அப்பகுதி சாலை ஓரத்தில் இருசக்கர வாகனத்தில் 2 பேர் நின்று கொண்டு இருந்தவர்கள் மீது திடீர் என மோதியது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் அந்த வழியாக மார்த்தாண்டம் பகுதியில் நடைபெறும் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொள்ள மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் ஸ்ரீ வல்லபிராசத், குமரி தொகுதி பொறுப்பாளர் ராஜ்குமார் எம். எல். எ ஆகியோர் சம்பவ இடத்தில் வாகனத்தை நிறுத்தினர். இதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் அவர்களை மீட்டு அவர்கள் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.