சிறுவர் பூங்கா அமைக்கும் பணி மீண்டும் தொடக்கம் !!
சிவகாசி அருகே சிறுவர் பூங்கா அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியது.
சிவகாசி அருகே திருத்தங்கல் செல்லியாரம்மன் ஊருணியில் சிறுவர் பூங்கா அமைக்கும் பணிகள் தொடக்கம். விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில் திருத்தங்கல் மண்டலத்தில் வடக்குரத வீதியில் உள்ள செல்லியாரம்மன் ஊருணியை தூர்வாரி சிறுவர் பூங்கா அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.இந்த ஊருணி கடும் ஆக்கிரமிப்பு காரணமாகவும் கழிவுநீர் தேங்கியிருப்பதாலும் ஊருணி சுற்றி பெரும் துர்நாற்றம் வீசியது.
கடந்த 20 ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி கழிவுநீர் ஓடையாக மாறி இருந்தது. சிவகாசி மாநகராட்சி நிர்வாகம் இந்த ஊரணியை தூர்வாரி சிறுவர் பூங்கா அமைக்க முடிவு செய்தது.இதற்காக கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.61 லட்சம் நிதியும் ஒதுக்கியது.சிறுவர் பூங்கா அமைக்கும் பணிகளுக்கு கடந்த 2022ல் செப்டம்பர் மாதம் 28ம் தேதி பூமிபூஜை நடைபெற்றது.
பூமிபூஜை போட்ட ஒருசில நாட்கள் மட்டுமே பணிகள் நடைபெற்றது. ஊரணியில் தண்ணீ்ரும் வற்றி ஆக்கிரமிப்புகளும் எடுக்கப்பட்ட பின் ஒருசில நாட்கள் மட்டும் பணிகள் நடைபெற்றது. தொடர்ந்து பணிகள் கிடப்பில் போடப்பட்டன.பூமிபூஜை போட்டு ஒன்றறை ஆண்டுகளுக்கு மேலாகியும் 20 சதவிகிதம் கூட முடியாத நிலையில் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. தற்பொது சிறுவர் பூங்கா அமைக்கும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.இதனால் அந்த வார்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.