ராணிப்பேட்டையில் குடியரசு தின விழா

ராணிப்பேட்டையில் நாட்டின் 75 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது

Update: 2024-01-26 09:33 GMT


ராணிப்பேட்டையில் நாட்டின் 75 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது


நாட்டின் 75 வது குடியரசு தினத்தையொட்டி ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின கொடியினை மாவட்ட ஆட்சியர் வளர்மதி பறக்கவிட்டு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று காவலர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். முன்னதாக இந்தியாவி லேயே முதன் முதலாக நிறுவப்பட்ட அண்ணல் மகாத்மா காந்தி சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதைதொடர்ந்து, வேளாண்மை பொறியியல் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை , சுகாதாரப் பணிகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தோட்டக்கலை துறை, வேளாண் துறை ஆகிய துறைகளின் சார்பில் 25 பயனளிகளுக்கு 10 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மேலும் அரசுத் துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும், காவலர்களுக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கி சிறப்பித்தார். அதன் பின்னர் பள்ளி மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

Tags:    

Similar News