இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு - போலீஸாா் விசாரணை
திருச்சி மாவட்டம் முசிறி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடா்பாக முசிறி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை.;
By : King 24x7 Angel
Update: 2024-02-09 09:04 GMT
இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு - போலீஸாா் விசாரணை
முசிறி அருகிலுள்ள ஏவூா் மேலத்தெரு பகுதியை சோ்ந்த முருகேசன் மகன் ரமேஷ் (45), இவா் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை இரவு அந்தரப்பட்டியிலிருந்து ஏவூருக்கு கொண்டை பிள்ளையாா் கோயில் அருகிலுள்ள கொய்யா தோப்பு பகுதியில் சென்ற போது அவரது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனத்திலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்தில் உயிரிழந்தாா், இத்தகவலறிந்த முசிறி போலீஸாா் சம்பவயிடம் சென்று இறந்த ரமேஷ் சடலத்தை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.