நாய் குரைத்ததால் துணை தாசில்தார் ஆவேசம்

நாய் குரைத்ததால் துணை தாசில்தார் ஆவேசம்;

Update: 2024-05-03 05:12 GMT
நாய் குரைத்ததால் துணை தாசில்தார் ஆவேசம்

காவல்துறை விசாரணை


  • whatsapp icon
நாய் குரைத்ததால், பக்கத்து வீட்டுக்காரரை வெட்ட அரிவாளுடன் துணை தாசில்தார் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கள்ளக்குறிச்சி புத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன். இவர் வளர்த்து வரும் நாய் கடந்த 29ம் தேதி காலை 10:15 மணிக்கு தெருவில் சென்ற நாய்களை பார்த்து குரைத்தது. இதனால் ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்த மண்டல துணைதாசில்தார் சிலம்பரசன், தனது வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக்கொண்டு ஆவேசமாக திட்டிக்கொண்டே கொளஞ்சியப்பன் வீட்டிற்கு சென்று, அவனை வெளியே வரச்சொல் என ஆவேசமாக கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் அவரை சமாதானம் செய்து திருப்பி அனுப்பினர். இச்சம்பவம் குறித்த சி.சி.டி.வி., பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News