தேரை வடம் பிடித்து இழுத்து சென்ற பக்தர்கள்
நத்தம் கைலாசநாதர் கோயில் வைகாசி விசாகத் திருவிழா இன்று காலை திருத்தேரோட்டம் நடந்ததையொட்டி ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
Update: 2024-05-22 11:02 GMT
நந்தம் கோவில் பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்பிகா சமேத கைலாச நாதர் கோயில் உள்ளது. இது மேற்கு பார்த்த சிவாலயம் என்ற சிறப்பு பெற்றது. இக்கோயிலின் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 13 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி முன்னதாக செண்பகவல்லி அம்பிகா சமேத கைலாச நாதர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனைகள் நடந்ததை தொடர்ந்து திருத்தேர் வடம்பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை, கட்டளைதாரர்கள், நத்தம் கோவில்பட்டி அக்ரஹாரம், கிழக்கு, மேற்கு தெரு, கொண்டையம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.