தேர்தல் விதிமீறல் புகார்களை உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தகவல் !

தேர்தல் விதிமீறல்கள் குறித்த புகார்களை தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும், cVigil செயலி மூலமும் புகார் அளிக்கலாம் மாவட்ட நிர்வாகம் தகவல்

Update: 2024-04-10 04:49 GMT

மாவட்ட நிர்வாகம்

பெரம்பலூர் மாவட்டம் தேர்தல் விதிமீறல்கள் குறித்த புகார்களை தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – கட்டணமில்லா தொலைபேசி வாயிலாகவும்,cVigil செயலிமூலமும் புகார் அளிக்கலாம் மாவட்ட நிர்வாகம் தகவல். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முதல் தளத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க விரும்புவோர் 1800-425-9188 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும், 04328-299166 மற்றும் 299188, என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

காவல்துறையின் கட்டுப்பாட்டு அறையினை 9498100690 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். மேலும், பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை cVIGIL என்ற மொபைல் செயலியில் புகைப்படமாகவும், வீடியோ, ஆடியோவாகவும் பதிவேற்றம் செய்து தெரிவிக்கலாம்.

இந்த செயலியில் தெரிவிக்கப்படும் புகார்களுக்கு 100 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். உரிய அனுமதி இல்லாமல் கட்சிக்கூட்டங்கள் நடத்துவது, கட்சிக்கொடிகள் அகற்றப்படாமல் இருப்பது உள்ளிட்ட தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை தொலைபேசி வாயிலாக 19 புகார்களும், சி.விஜில் செயலி மூலமாக 7 புகார்களும் வரப்பெற்றுள்ளது.

ஒவ்வொரு புகாரின் மீதும் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை உடனுக்குடன் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம்.

புகார் தெரிவிப்பவரின் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News