சிவகாசியில் 6பட்டாசு ஆலை தற்காலிமாக உரிமத்தை ரத்துசெய்த மாவட்ட நிர்வாகம்

சிவகாசியில் விதிமீறிய 6 பட்டாசு ஆலையின் தற்காலிமாக உரிமத்தை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்தது.

Update: 2024-04-29 14:41 GMT
பட்டாசு ஆலையின் தற்காலிமாக உரிமம் ரத்து 

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தடை செய்யப்பட்ட சரவெடி தயாரிக்க பயன்படும் பேரியம் நைட்ரேட் மற்றும் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்ட 6 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை.சிவகாசி சுற்று பகுதிகளில் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை(நாக்பூர்),சென்னை வெடிபொருள் கட்டுபாட்டு துறை, மாவட்ட வருவாய் அலுவலக உரிமம் பெற்ற 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சரவெடி உற்பத்தி மற்றும் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தி பட்டாசு தயாரிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.பட்டாசு ஆலைகளில் விபத்துக்களை தவிர்க்கும் வகையில்,விதிமீறல் குறித்து பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில் தனி வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியரின் சிறப்பு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த ஆய்வில் மொத்தம் 6 பட்டாசு ஆலைகளில் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் பணியாளர்களை கொண்டு பட்டாசு தயாரித்தல், தடை செய்யப்பட்ட சரவெடி உற்பத்தி தெரியவந்தது.மேலும் டிஆர்ஓ உரிமம் பெற்ற பட்டாசு ஆலையில் விதிகளை மீறி பேன்சி ரக பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டது.

இந்த 6 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு தனி வட்டாட்சியர் திருப்பதி பரிந்துரை செய்துள்ளார்.

Tags:    

Similar News