பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர்
நத்தத்தில் வருவாய் தீர்வாயம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.இதை ஜமாபந்தி அலுவலராக மாவட்ட ஆட்சியர் பூங்கொடி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு வழங்கினார்.
Update: 2024-06-20 01:49 GMT
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தாலுகா அளவிலான 1433-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன் மற்றும் வியாழக்கிழமையுமாக ஆக 3 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி நத்தம் தாலுகா ரெட்டியபட்டி உள் வட்டத்திலுள்ள முளையூர், புன்னப்பட்டி, செல்லப்பநாயக்கன்பட்டி , இடையபட்டி, சாத்தம்பாடி, ரெட்டியபட்டி, புதூர், லிங்கவாடி ஆகிய கிராமங்களுக்கான பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ஜமாபந்தி அலுவலராக தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து பெற்றார். இம்மனுக்களில் பட்டா மாறுதல், வீட்டுமனைப்பட்டா இலவச வீட்டு மனப் பட்டா, பிறப்பு, இறப்பு, சாதி, இருப்பிடச் சான்றிதழ்கள், போன்ற பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.