திருப்பூரில் பேருந்துக்குள் மட்டையான போதை ஆசாமியால் பரபரப்பு.
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பேருந்துக்குள் மட்டையான போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.;
Update: 2024-01-13 10:26 GMT
மட்டையான குடிபோதை ஆசாமி
பேருந்துக்குள் மட்டையான குடிபோதை ஆசாமியால் பரபரப்பு. திருப்பூர் மாவட்டம் பல்லடம் பேருந்து நிலையத்தில் P11 என்ற பல்லடம் வழியாக நந்தவனப்பாளையம் வரை செல்லும் அரசு பேருந்தில் குங்குமம்பாளையம் பகுதிக்கு செல்வதற்காக பல்லடம் பகுதியில் ஏறி பல்லடம் பேருந்து நிலையத்தில் குடிபோதையில் பேருந்துக்குள்ளேயே தலைகால் புரியாமல் பேருந்தில் படுத்து கிடந்துள்ளார்.மேலும் பேருந்தில் இருந்து இறங்காமல் அரைநிர்வாணத்தில் இருந்தது பயணிகளை அதிருப்தியில் ஆழ்த்தியது.தொடர்ந்து போலீஸாருக்கு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தகவல் தெரிவிக்கவே போலீசார் போதை ஆசாமியை அப்புறப்படுத்தியபிறகு பேருந்து தாமதமாக புறப்பட்டு சென்றது.