பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-28 18:03 GMT

ஆர்பாட்டம் 

பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் 28ஆம் தேதி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வட்ட செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் மின்வாரியத்தை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி கண்டன கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெஞ்சமின், செல்வகுமார், முத்துலட்சுமி, நல்லுசாமி, செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News