சமத்துவ மக்கள் கழகம் இறுதி கட்ட பிரச்சாரம்
தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து சமத்துவ மக்கள் கழகம் கட்சியினர் இறுதி கட்ட பிரச்சாரம் மேற்கொண்டனர்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வெற்றி வேட்பாளர் கனிமொழி கருணாநிதியை ஆதரித்து தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் தூத்துக்குடி வேலவன் ஹைபர் மார்க்கெட் அதிபர் ஆனந்த்ஐ சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு கோரினர். அதனைத் தொடர்ந்து ஹைபர் மார்க்கெட்டிற்கு குடும்பம் குடும்பமாக வருகை தந்த 500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்குகள் சேகரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ், டேவிட் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை, மாவட்டத் துணைச் செயலாளர் சூசைமுத்து, மாவட்ட பிரதிநிதி பெரியசாமி மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.