புனித ஞானப்பிறகாசியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

புனித ஞானப்பிறகாசியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2024-06-15 07:23 GMT

புனித ஞானப்பிறகாசியார் ஆலய திருவிழா 

குமரி மாவட்டம் காரங்காடு புனித ஞானப்பிறகாசியார் ஆலய 246-வது பங்கு குடும்ப விழா நேற்று திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெற உள்ள இந்த விழாவில் நேற்று  மாலை திருக்கொடி பவனி,  ஜெபமாலை, குழித்துறை மறைமாவட்ட தலைமைச் செயலர் பேரருட்பணி அந்தோணி முத்து தலைமையில், முட்டம் மறைவட்ட முதன்மை பணியாளர் அருட்பணி ஸ்டான்லி சகாய சீலன், காரங்காடு பங்குத்தந்தை சுஜின் ஆகியோர் முன்னிலையில் திருக்கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறுகிறது. 8-ம் நாள் திருவிழாவான 21-ம் தேதி  புனித ஞானப்பிறகாசியார் பாதுகாவலர் பெருவிழாவில் இரவு 8 மணிக்கு அன்பின் விருந்தும், 9-ம் நாள் திருவிழாவில் காலை 7.30 மணிக்கு முதல் திருவிருந்து சிறப்புத் திருப்பலியும், இரவு 10 மணிக்கு பாதுகாவலரின் சிறப்புத் தேர்ப்பவனியும், 10-ம் நாள் திருவிழாவான  23-ம் தேதி காலை 6 மணிக்கு முதல் திருப்பலி, காலை 8 மணிக்கு குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் தலைமை ஏற்று அருளுரை வழங்கும் திருவிழா சிறப்புத் திருப்பலியும், தொடர்ந்து புனிதரின் திருத்தேர் பவனி ஆகியவை நடைபெறுகிறது.
Tags:    

Similar News