தேமுதிக இறுதிக்கட்ட பிரச்சாரம்

விருதுநகரில் தேமுதிக வேட்பாளார் சண்முக பாண்டியன் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்தார்.;

Update: 2024-04-17 10:08 GMT

விருதுநகரில் தேமுதிக வேட்பாளார் சண்முக பாண்டியன் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்தார்.


கட்டி அணைத்து வாழ்த்திய பெண்: கலங்கி நின்ற சண்முக பாண்டியன் இறுதிக்கட்ட பிரச்சாரம்: வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக அவரது சகோதரர் சண்முகையா பாண்டியன் விருதுநகர் நகர் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர், பாஜக வேட்பாளராக ராதிகா சரத்குமார், அதிமுக கூட்டணியில் மறைந்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கவுசிக் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 18-வது மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைவதையொட்டி அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் தெப்பக்குளம், மேலரத வீதி, அசன் ஓட்டல்,ஏடிபி காம்புவுண்டு ஆகிய பகுதிகளில் விஜய பிரபாகரன் சகோதரர் சண்முகயை பாண்டியன் நடிகர் ராஜேந்திரநாத்துடன் பரப்புரை மேற்கொண்டார்.

Advertisement

அப்போது அவர் பேசியதாவது தன் தந்தையின் மறு உருவமாக மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் வந்துள்ள விஜய பிரபாகரனுக்கு ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொண்டார், மேலும் அவர் வெற்றி பெற்றால் மக்கள் உங்களை தங்கத்தட்டில் வைத்து தாலாட்டுவார் எனவும் தெரிவித்தார். மேலும் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ளே செல்வம் பேக்கரியில் வியாபாரம் செய்தார்.தேநீர் தயாரித்தார். பின்னர் அப்பகுதியில் இருந்த பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார். பின்னர் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார் அப்போது பலரும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். மேலும் பேருந்தில் ஏறி பயணிகளிடம் வாக்கு சேகரித்தார்.அப்போது பெண் ஒருவர் அவரை கன்னத்தை பிடித்து கொஞ்சினார் ,கட்டிப் அணைத்தார்.

Tags:    

Similar News