போராட்டத்தை விட்டு கடலுக்கு சென்ற மீனவர்கள்
கூடங்குளம் அருகே நாட்டு படகுகளில் இன்ஜின்கள் திருடப்படுவதை கண்டித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட மீனவர்கள் இன்று போராட்டத்தை கைவிட்டு கடலுக்கு சென்றனர்.;
Update: 2024-02-20 05:24 GMT
கடலுக்கு சென்ற மீனவர்கள்
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே நாட்டு படகுகளில் இன்ஜின்கள் தொடர்ந்து திருடப்படுவதை கண்டித்தும், தொடர் திருட்டு சம்பவத்தை தடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கூடங்குளத்தில் மீனவர்கள் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று (பிப்-20)அதிகாலை முதல் வழக்கம்போல் அனைத்து நாட்டு படகுகளுடன் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.