ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கும் பணி - எம்.பி அடிக்கல் நாட்டினார்.

நாமக்கல் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கும் பணி - இராஜேஸ்குமார் எம்.பி அடிக்கல் நாட்டினார்.

Update: 2023-12-29 17:43 GMT

நாமக்கல் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கும் பணி - இராஜேஸ்குமார் எம்.பி அடிக்கல் நாட்டினார்.

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், வசந்தபுரம் ஊராட்சியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத்துறை சார்பில், ரூ.6.60 கோடி மதிப்பீட்டில் புதிய நாமக்கல் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கும் பணி அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.ராமலிங்கம் (நாமக்கல்), கு.பொன்னுசாமி (சேந்தமங்கலம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கலந்து கொண்டு கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் அடிக்கல் நாட்டினார்.

நாமக்கல் மாவட்டம், வசந்தபுரம் கிராமத்தில் 2.0 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, புதிய நாமக்கல் ஒழுங்குமுறை விற்பனை கூடம், ரூ.2.00 கோடி மதிப்பில் e-NAM பரிவர்த்தனைக்கூடம், ரூ.2.00 கோடி மதிப்பில் சேமிப்பு கிடங்கு, ரூ.14.00 இலட்சம் மதிப்பில் உலர் களம், ரூ.2.46 கோடி மதிப்பில் விவசாயிகள் ஓய்வறையுடன் கூடிய பரிவர்த்தனைக்கூடம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளுடன் மொத்தம் ரூ.6.60 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ளது.

உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுவதன் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விற்பனை செய்ய முடியும். சேமிப்பு கிடங்கில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பாக சேமித்து வைக்க முடியும். மேலும், பொருளீட்டுக்கடன் பெறவும் இயலும். சேமிப்பு வசதி ஏற்படுத்தப்படுவதன் மூலம் அறுவடைக்கு பிந்தைய சேதம் தவிர்க்கப்படுவதுடன் மழை காலங்களில் தானியங்களை பாதுகாப்பாக வைத்திட முடியும்.

மேலும், விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உறுதி செய்யப்படுவதுடன், இடைத்தரகர்களது இடையூறு இல்லாமல் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை அதிக விலைக்கு விற்று பயன்பெற முடியும். ஆதார திட்டம் (Price Support Scheme)இன் கீழ் பச்சை பயிறு, உளுந்து, கொப்பரை போன்ற விளைபொருட்கள் அரசால் கொள்முதல் செய்யப்படுதன் வாயிலாக விவசாயிகளுக்கு அதிக இலாபம் கிடைக்க வழி வகுக்கும். e-NAM எனப்படும் மின்னனு தேசிய வேளாண் சந்தை இணைய முகப்பு வாயிலாக விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை உள்ளூர் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களுக்கும் விற்பனை செய்து விளைபொருட்களுக்கான தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணை இயக்குநர் சு.துரைசாமி, நாமக்கல் விற்பனைக்குழு தனி அலுவலர் அ.நாசர், நாமக்கல் விற்பனைக்குழு செயலாளர் இரா.தர்மராஜ் உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News