அரசு பேருந்தின் முன்பக்க டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு

பழனி அருகே அமர பூண்டி என்ற இடத்தில் சென்றபோது அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்று பேருந்துக்கு முன்பாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-06-03 14:05 GMT

பழனி அருகே அமர பூண்டி என்ற இடத்தில் சென்றபோது அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரம் கழன்று பேருந்துக்கு முன்பாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.


திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து 80க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இன்று காலை 10.15 மணியளவில் பழனி பஸ் நிலையத்திலிருந்து தீர்த்த கவுண்டர் வலசு கிராமத்திற்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சை பாண்டி என்பவர் ஓட்டிச் சென்றார். சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்நிலையில் அரசு பஸ் அமர பூண்டி என்ற இடத்திற்கு அருகே சென்றபோது முன்பக்க சக்கரம் கழன்று பேருந்துக்கு முன்பாக ஓடியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் சாமர்த்தியமாக பஸ்சை சாலையோரத்தில் நிறுத்தினார்.

தொடர்ந்து கழன்று ஓடிய சக்கரம் சாக்கடை கால்வாயில் விழுந்தது. சக்கரம் கழன்று ஓடியதை கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்து அவசர அவசரமாக கீழே இறங்கினர். அவர்கள் பின்னர் வேறு பஸ்சில் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

Tags:    

Similar News