பிரேக் பிடிக்காமல் ஓடிய அரசு பேருந்தால் போக்குவரத்து பாதிப்பு !

திருவட்டாரில் பிரேக் பிடிக்காமல் ஓடிய அரசு பேருந்து.போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதி.

Update: 2024-06-15 06:17 GMT

அரசு பேருந்து

தக்கலையில் இருந்து அருமனைக்கு தடம் எண் 16 இ அரசு பஸ் நேற்று மாலை 3 மணிக்கு புறப்பட்டது. பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அந்த பஸ் 4 மணியளவில் திருவட்டார் காங்கரை சந்திப்பில் வந்த போது டிரைவர் பிரேக் போட முயன்றார். ஆனால் பிரேக் பிடிக்காமல் பஸ் ஓடிக்கொண்டே இருந்தது.

இதனால் பஸ்சில் இருந்த பயணி கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து டிரைவர் சாமர்த் தியமாக செயல்பட்டு ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்தி பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். இதையடுத்து பயணிகள் நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து பயணிகள் இறக்கப்பட்டு மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.இதுகுறித்து திருவட்டார் அரசு போக்குவரத்து கழக பணி மனைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

பணிமனையில் இருந்து தொழில்நுட்ப பணியாளர்கள் வந்து பஸ்சை தற்காலிகமாக சீரமைத்து பணிமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்ப வத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெ றுவதால் பயணிகள் நலன் கருதி அரசு பஸ்களை முறையாக பராமரித்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News