குளங்கள் ஆக்கிரமிப்பு குறித்து பொதுப்பணித் துறையிடம் விவரங்கள் பெற்று அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அரசு விளக்கம்
திருவண்ணாமலை நகரில் உள்ள 32 குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது குறித்து பதியப்பட்ட வழக்கு,குளங்கள் ஆக்கிரமிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித் துறையிடம் விவரங்கள் பெற்று அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அரசு விளக்கம் அளித்துள்ளது.
By : King 24x7 Angel
Update: 2024-07-05 09:30 GMT
திருவண்ணாமலை நகரில் உள்ள 32 குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தவறினால் நில நிர்வாக ஆணையர், பொதுப்பணித் துறை, அறநிலைய துறை செயலாளர்கள் நேரில் ஆஜராக உத்தரவிடப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. திருவண்ணாமலை நகரில் உள்ள 138 குளங்களில் 32 குளங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, கட்டுமானங்கள் எழுப்பப்பட்டுள்ளதாக கூறி, அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார். குளங்கள் ஆக்கிரமிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித் துறையிடம் விவரங்கள் பெற்று அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அரசு விளக்கம் அளித்துள்ளது.